Saturday, March 12, 2011

தகவல் அறியும் உரிமை சட்டத்தை முடக்க முயற்சி செய்த தமிழக அரசின் உத்தரவிற்கு உயர்நீதிமன்றம் தடை விதித்தது


தகவல் உரிமை ஆணையர்கள் நியமனத்தில் முறைகேடு

தகவல் ஆணையர்கள் நியமனத்தில் எதிர்கட்சி தலைவரும் முக்கியபங்காற்றுவார். ஆனால் தமிழக அரசோ அவரசர அவசரமாக தங்களுக்கு சாதகமானவர்களை தெரிவு செய்தது. அதுவும் சட்டப் பேரவைத் தேர்தல் குறித்த அறிவிப்பு வெளியான மார்ச் 1-ம் தேதி . தமிழக அரசு பி.ஏ. ராமய்யா, சி. மனோகரன், ஏ. ஆறுமுக நயினார் ஆகியோரை தமிழகத் தகவல் ஆணையர்களாக நியமித்து உத்தரவு பிறப்பித்தது. தகவல் ஆணையர்கள் நியமனங்களில் விதி மீறல்கள் நிகழ்ந்துள்ளன. அவர்களின் நியமனங்கள் தொடர்பான நடைமுறையில் எதிர்க்கட்சித் தலைவர் புறக்கணிக்கப்படுள்ளார்.எதிர் கட்சி தலைவருக்கு உரிய வாய்ப்பு வழங்காமலையே இந்த உத்தரவு பிரப்பிக்கப்படுள்ளது.ஆகையால் , தற்போது நியமிக்கப்பட்ட மேற்குறிப்பிட்ட மூவரும் தகவல் ஆணையர்களாகச் செயல்படுவதற்கு தடை விதிக்க வேண்டும். மேலும், அவர்களின் நியமனங்கள் தொடர்பான அரசாணையையும் ரத்து செய்ய வேண்டும் என கோரி விஜயலட்சுமி உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இம்மனுவை விசாரித்த உயர்நீதிமன்றம் தகவல் ஆணையர்கள் முறைகேடான நியமனத்திற்கு இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. இவ்வாறு தான் கருணாநிதிக்கு சாதகமான ஸ்ரீபதி தகவல் ஆணையராக நியமிக்கப்பட்டார். தற்போது எந்த தகுதியும் இல்லாத இந்த ஆணையர்கள் ஆளும் கட்சி விசுவாசத்திற்காக நியமிக்கப்பட்டுள்ளனர். இதன் மூலம் தகவல் அறியும் உரிமை சட்டத்திற்கே சமாதி கட்டும் வேலையை இந்த அரசு செய்துள்ளது. இது குறித்து மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டியது நமது கடமையாகும்.

Comments :

0 comments to “தகவல் அறியும் உரிமை சட்டத்தை முடக்க முயற்சி செய்த தமிழக அரசின் உத்தரவிற்கு உயர்நீதிமன்றம் தடை விதித்தது”


Post a Comment