
2009 ல் விழுந்த அடியின் காயம் வேண்டுமானால் ஆறிப்போயிருக்கலாம் ஆனால் அந்த அவமானம் மறந்து போயிருக்குமேயானால் நாம் மனிதர்கள் என்று சொல்வதற்கு கூட தகுதி ஆற்றவர்களாகி விடுவோம். காவல் துறையினரால் கட்டவிழ்த்து விடப்பட்ட தாக்குதல் எதேச்சையான விஷயம் அல்ல. அது ஆளும் அரசாங்கத்தின் உச்சகட்ட கோரதாண்டவம் அரசு என்றால் காவல் துறையும் ,ராணுவமும் தான் நீதி மன்றங்களும் ,நீதிபதிகளும் , வழக்கறிங்கர்களும் காவல் துறையின் கட்டுப்பட்டவர்கள், என்று நமக்கு கண்முன்னே நடத்தி காட்டிய நிகழ்ச்சி. அதுமட்டுமல்ல ஒட்டுமொத்த நீதி துறைக்கு எதிராக நடந்த இந்த தாக்குதலில் மக்களின் அனைத்து பிரச்சனைகளுக்கும் வழக்கு தொடுத்து தீர்வு தேடித்தரும் வழக்கறிங்கர்கள் தங்கள் சமுதாய மக்கள் மீது தொடுக்கப்பட்ட தாக்குதலுக்கு ஒரு கடைநிலை காவல் துறையினரை கூட சட்டத்தின் மூலம் தண்டிக்க முடியவில்லை என்பது மிகவும் அவமானகரமான விஷயம் ஆகும். இனியும் பொறுமை காத்து இருப்போமானால் நம்மை வரலாறு சுரணையற்றவர்கலாகவே பதிவு செய்யும்.