
பல்லாயிரக்கணக்கான விடுதலைப் போராட்ட வீரர்களின் கனவான அனைத்து வகை ஒடுக்குமுறை மற்றும் சுரண்டல்களிலிருந்தான விடுதலையை காங்கிரஸ் தலைமையிலான விடுதலைப் போராட்டம் சாதிக்கத் தவறிவிட்டது. வெள்ளை முதலாளிகள் இருந்த இடத்தில் கறுப்பு முதலாளிகள் அமர்ந்து தங்களது சுரண்டல் வேட்டையை தொடர அது வழிவகுத்தது. இந்நிலையில் அனைத்து முதலாளித்துவ சுரண்டலுக்கும் முற்றுப்புள்ளி வைக்க விரும்பி உருவாக்கப்பட்ட பகத்சிங்கின் ஹிந்துஸ்தான் சோசலிஸ்ட் ரிபப்ளிக்கன் ஆர்மி ஒரு உண்மையான கம்யூனிஸ்ட் கட்சியாக மலர்ந்தது, உழைக்கும் மக்களின் ஒட்டுமொத்த விடுதலையை சாதிப்பதற்க்கு முன்பே வெள்ளை ராணுவம் பகத்சிங் மற்றும் அவர்களது தோழர்களின் இன்னுயிரை கொள்ளை கொண்டு விட்டது. தியாகி பகத்சிங் விட்ட பணி தொடர இந்தியாவில் கம்யூனிஸ்ட் என்ற பெயரில் செயல்பட்டவர்கள் தவறி விட்டனர். தொடரும் சுரண்டலை முடிவுக்கு கொண்டு வர அவரது தியாகத் திருத்தடங்களில் நடை பயில்வோம்.